Thursday, September 30, 2010

எந்திரன் - திரை விமரிசனம்



டிஸ்கி: அடிப்படையில் நான் ரஜினி ரசிகன். ஆறாம் கிளாசில் குரு சிஷ்யன் தனியாக போடி மீனாட்சி தியேட்டரில் பார்த்தது முதல், டெண்த்தில் புதுக்கோட்டை சாந்தி தியேட்டரில் அண்ணாமலை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்து, அவ்வழக்கத்தை இன்று வரை தொடர்வது வரை.
ஆனால் அந்த bias இதில் தெரியாமல் இருக்க முயற்சி செய்கிறேன். முக்கியமாக ஒரு ரசிகனாக இப்படம் எனக்கு எந்த அனுபவத்தை குடுத்தது என்பதே இந்த விமரிசனத்தின் focus .

ரோபோவுக்கு பீலிங்க்ஸ் வந்தால் என்ன்னவாகும் என்பதே கதை. இதற்கு மேல் சொல்வது spoiler ஆக அமையும்.

எந்த வித பில்ட் அப்பும் இல்லாமல் மிக சாதாரணமாக ரஜினி ரோபோவை பில்ட் செய்வதில் தொடங்குகிறது படம். ஷங்கருக்கு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபுள் எப்போதும் உண்டு. முதல்வனில் முதல் 10 நிமிடம் ஓமகுச்சி வடிவேலுவை வைத்து காமெடி செய்வது போல் இதில் சந்தானம் / கருணாஸ். தலைவரையும் மொசுக்கென்று உடனே காட்டி விடுகிறார். புதிய மனிதா பாட்டும் முழுசாக இல்லை. போகட்டும். அதை மறக்கடிப்பது போல் அடுத்தடுத்த சைண்டிஸ்ட் ரஜினி - ரோபோ ரஜினி - ஐஸ்வர்யா காம்பினேஷன் காட்சிகள் breezy ஆக அமைகிறது. ஆங்காங்கே "லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்க"வில் எல்லாம் சுஜாதா தெரிகிறார். (முன்பே எழுதி வைத்தது போலும்.)
"உனக்கு இல்லாதது என்ட்ட இருக்கே" (அதற்கு ரஜினி கிளைமாக்ஸ்-இல் சொல்லும் பதிலும் அபாரம்), "மெட்டாலிக் மண்டையா"வில் சந்தானம் தெரிகிறார். இண்டர்வல் ப்ளாக்கில் கிட்டத்தட்ட 3 idiots போல் ஒரு வொண்டர்புல் சீனை வைத்து செம பீக்கில் இண்டர்வல் விடுகிறார். நாமும் ராஜ திருப்தியோடு ஒண்ணுக்கிருக்க போகிறோம். அது வரைக்கும் 'சிட்டி' ரோபோவின் ராஜாங்கம் தான். ரஜினியின் body language , வசன டெலிவரி எல்லாமே சிக்ஸர்களாக விழ ரசிகர்கள் சிரித்து/ரசித்து கொண்டே இருக்கிறார்கள் இண்டர்வல் வரைக்கும்.

இண்டர்வலுக்கு பிறகு தான் கதையே என்ற பில்ட் அப்பை நம்பி நிமிர்ந்து உக்கார்ந்து "இரும்பிலே ஒரு இருதயம்" பாட்டுடன் செகண்ட் ஹால்ப் பார்க்கிறோம். அதுவரை கதையில் இருந்த உயிர் போயி தடாலென்று "இப்போ பார்றா சைன்ஸ் பிக்சன்-ஐ" என்று ஷங்கர் கலாநிதியின் காசை கரைக்க ஆரம்பிக்கிறார். என்ன தான் கேரக்டர் என்றாலும் நம்ம தலைவர் நூத்துகணக்கில் போலீஸ்காரர்களை, ராணுவத்தினரை கொன்று தள்ளுவது அவ்வளவு உசிதமாக இல்லை பார்ப்பதற்கு. தொடர்கின்ற கேட் அண்ட் மௌஸ் காட்சிகளில் மூளையும் இல்லை, இதயமும் இல்லை. சவசவ என்று இரைச்சலாக சுமோக்களும் லாரிகளும் இடித்துக்கொண்டு சாவுகின்றன கிளைமாக்ஸ் வரைக்கும். செகண்ட் ஹாபை தூக்கி நிறுத்துவது ரோபோ ரஜினியின் அனாயசமான டயலாக் டெலிவரியும், attitude ம் தான். கிட்டத்தட்ட சந்திரமுகி வேட்டையனின் எக்ஸ்டென்ஷன் போல இருக்கிறது ரஜினியின் characterization அக்காட்சிகளில். கடைசியாக ஒரு ஷங்கர் பட யூசுவல் கோர்ட் சீன் வைத்து ("எங்க ரோபோவை விடுதலை செய்ங்க", "வெச்சான் பாரு ஆப்பு" மட்டும் தான் இல்லை) ஒரு சின்ன சென்டிமென்டுடன் படத்தை முடிக்கிறார். அந்த முடிவு நீட்.

படத்தின் மெயின் strength ரஜினி தான். ரோபோவாக அட்டகாசமா பொருந்தியிருக்கிறார். என்ன தான் bluemat காட்சிகள், கிராபிக்ஸ், rope டெக்னிக்-கள் இருந்தாலும் ரஜினியின் உழைப்பு நிறைய காட்சிகளில் நன்கு தெரிகிறது. அதை ரசிகர்களும் உணர்வது அக்காட்சிகளின் கைதட்டலில் தெரிகிறது. ஐஸ்வர்யா மிக அழகாக, ரஜினிக்கு இயல்பான ஜோடியாக பொருந்துகிறார். especially சிட்டி டான்ஸ் ஷோவ்கேசுக்கு தலைவன் ஆட்டம் செம செம.

நெகடிவ்ஸ் என்று பார்த்தால் படத்தில் சைண்டிஸ்ட் ரஜினியை சற்று மொக்கையாகி விட்டார்கள். ஒன்றுமில்லை, ரஜினி ஒரே சீனில் தலைகாட்டும் கலாபவன் மணிக்கு பயந்து ஓடுவது போல ஒரு காட்சி. அது இயல்பு என சிலர் சொல்லலாம். பட் இருந்தாலும் கெத்து கம்மி தான். சீன்களில் (especially செகண்ட் ஹால்ப்) ஒரு smartness இல்லை. terminator இல் ஆரம்பித்து, ஐரோபோட் கதை கருவில் ட்ராவல் ஆகி, transformers போல காட்சிகள் வைத்து, independence டே போல (வைரஸ் வைத்து) முடிகிறது கிளைமாக்ஸ். இப்படி எல்லாமுமாக இருக்க ட்ரை செய்வது அவ்வளவு பொருத்தி வரவில்லை. "Transformers " போல கிராபிக்ஸ் செய்ங்க" என்று ஷங்கர் சொல்லியிருப்பார் போல. ஆனால் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். ராம நாராயணன் படம் தவிர வேறு கிராபிக்ஸ் அறியாத தமிழ் திரையுலகில் இது நிச்சயம் மைல்கல் தான். பட் ஹாலிவுட் அளவில் இந்த கிராபிக்ஸ் சற்று பல் இளிக்க தான் செய்கிறது.

மற்றபடி சந்தானம் கருணாஸ் கூட்டணியை இன்னும் பெட்டராக யூஸ் செய்திருக்காலாம். வில்லன் டேனி டென்சொபாவுக்கு ஸ்கோப் கம்மி. ஏதோ சாப்ட்வேர் கம்பெனி CONTRACT போடுவது போல அமெச்சூர் காட்சிகளில் கெட்ட ரோபோ விற்கிறார். பாதியில் செத்தும் போகிறார்.

பின்னணி இசை இரைச்சல் இருந்த அளவுக்கு, lingering ஆக இல்லை. பாடல்களில் ரோபோ டா, காதல் அணுக்கள் (லொகேஷன் எக்செல்லன்ட்) பார்க்க நன்று. அரிமா அரிமா மாஸ். கிளிமஞ்சாரோ அப்படி ஒன்றும் எடுபடவில்லை. ரத்னவேலுவின் கேமரா underplayed அண்ட் நீட்.

FINAL வெர்டிக்ட்:
முதல் பாதியில் இருந்த smartness , லைவ்ளியான காட்சிகள் தொடர்ந்திருந்தால் படம் இன்னும் ஜோராக இருந்திருக்கும். ஒரு நல்ல ப்ளைட்டில் பர்ஸ்ட் கிளாஸ் சீட் குடுத்து , செம ஸ்மூத் டேக் ஆப் செய்து, நல்ல மீல் குடுத்து, திடீரென்று turbulence வந்த எபக்டை குடுக்கிறது படம். ரசிகனாக எனக்கு படம் ஓகே. பட் ஷங்கர் டமால் டுமீலை குறைத்து இன்னும் ஷார்ப்பான சீன்ஸ் யோசித்திருக்கலாம்.

மொத்தத்தில், எந்திரன் - உயிர் கம்மி. விலை அதிகம்.((பின்ன, 25 $ குடுத்து பார்த்தோம்ல, அதே தியேட்டரில் ஹாலிவுட் படம் 2 $க்கு ஓடுது)

எந்திரனுக்கு நன்றி

வாழைப்பழ சோம்பேறியான என்னை முழுசாக ஒரு பதிவு போட வைத்த எந்திரனுக்கு நன்றி. அடியேன் பாலகன் ப்ளாக் உலகில். உங்கள் ஆதரவை நாடி..